Thursday, 9 April 2020

டல்கோனா காபி(Dalgona Cold Coffee)


samayam tamil

தேவையான பொருள்கள்
  1. 1 பெரிய கிளாஸ் காபி தயாரிக்க...
  2. காபி பவுடர் - 2 ஸ்பூன்
  3. சர்க்கரை - 2 ஸ்பூன்
  4. வெந்நீர் - 2 ஸ்பூன் (மிதமான சூட்டில்)
  5. பால் - 1 கப்
Explanation

  • காபி பவுடர், சர்க்கரை, வெந்நீர் மூன்றும் சம அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பால் நீங்கள் காய்ச்ச வேண்டிய அவசியமே கிடையாது. ஃபுல் க்ரீம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஃபிரிட்ஜில் வைத்த ஜில்லென்ற பால் என்றால் மதிய வேளையில் குடிக்க அமிர்தமாக இருக்கும். சரி வாங்க. டல்கோனா காபி போடலாம்.
  • ஒரு பௌல் அல்லது டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் காபி பவுடரும் அதே அளவு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது சர்க்கரையும் காபி பவுடரும் அளந்த அதே ஸ்பூனில் 2 ஸ்பூன் மட்டும் வெந்நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதை ஒரு ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து விட்டு, கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஸ்பூனால் அல்லது ஹேண்ட் பிளண்டரில் அடிப்பது போல, கொஞ்சம் வேகமாக நன்கு அடிக்க (ஃபீட்) ஆரம்பியுங்கள்.
  • நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு நேரத்தில் காபி பொடியின் பிரௌன் கலர் வெளுப்பான நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.
  • கொஞ்சம் கை வலிக்கிற மாதிரி இருந்தா வீட்ல இருக்கற வேற யாரையாவது கொஞ்சம் நேரம் பீட் பண்ண சொல்லுங்க. கிட்டதட்ட காபி பொடியின் முழு நிறமும் மாறி கேரமல் நிறத்துக்கு பேஸ்ட் போல மாற ஆரம்பிக்கும். போதும்னு விட்றாதீங்க... அவ்வளவு தான் கரெக்ட்டான பதத்துக்குப் பக்கத்துல வந்துட்டோம். இன்னும் கொஞ்சம் நேரம் நல்லா பீட் பண்ண பண்ண ஐஸ்க்ரீம், பீநட் பட்டர் பதத்துக்கு கெட்டியாக ஆரம்பிச்சிடும். அவ்வளவு தான்.
  • இப்போ ஒரு கிளாஸ் எடுத்து முக்கால் டம்ளர் அளவுக்கு பால் ஊத்திக்கோங்க. அதற்கு மேல் அப்படியே க்ரீமியா பீட் பண்ணி வெச்சிருக்கிற காபி க்ரீமை அதுமேல எடுத்து வைங்க. அது திக்கா இருக்கறதால அப்படியே பாலோட மிக்ஸ் ஆகாம மேலே மிதந்துகிட்டு நிக்கும். அவ்வளவு தாங்க. பர்ஃபெக்டான டல்கோனா காபி ரெடி.
  • இப்போ இந்த க்ரீமை ஸ்பூனால லேசா பாலோட கலந்து கலந்து என்ஜாய் பண்ணி குடிங்க...

No comments:

Post a Comment